குறைந்ந வருமானம் பெரும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு; வட மாகாணத்தில் அரைவாசி பெயர் நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குறைந்ந வருமானம் பெரும் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு; வட மாகாணத்தில் அரைவாசி பெயர் நீக்கம்!

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து தேர்வு செய்யப்பட்ட 13,540 பேரில் 4,230 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 9,310 பேருக்கு மட்டுமே நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

குறைந்ந வருமானம் பெரும் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்சமயத்திற்கு கவனத்தில்கொள்வதில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 19ஆம் திகதி மாலை அவசர உத்தரவை பிறப்பித்திருந்தது.

க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு பூராகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அறிவித்த அரசு தற்போது வடக்கு கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிட்ட அதேநேரம் ஏனைய 07 மாகாணங்களிலும் அதனை வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 08 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு கடந்த 19 மாலை தொலைநகல் மற்றும் மின்அஞ்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதேநேரம் இந்த எண்ணியில் ஏனைய 07 மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு லட்சம் வேலை வாய்ப்பும் 07 மாகாணத்திற்குள் முடக்கப்படுமா? என்ற ஐயம் அப்போது எழுப்பப்பட்டது. இதேநேரம் வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அரச ஆதரவுக் கட்சிகள் இந்த வேலை வாய்ப்பினை வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறியே இளையோரின் வாக்கினையும் தேர்தல் பணிகளையும் பெற்றதான குற்றச் சாட்டுக்களும் எழுந்தன.

இந்த நியமனத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6,626 பேரும், கிளிநொச்சியில் 2,261 பேரும், மன்னாரில் 1,830 பேரும் , முல்லைத்தீவில் 1,565 பேரும் நியமிக்கப்படவிருந்ததோடு வவுனியாவில் 1,258 பேரும் என மொத்தம் 13,540 பேர் நியிமிக்க தயாராக இருந்தனர். இவர்களிற்கு கடந்த 31ஆம் திகதி முதல் நியமனம் வழங்கப்படும் எனவும் மாவட்டச் செயலகங்களிற்கு உறுதியளிக்கப்பட்டது.

இருந்தபோதும் வடக்கு கிழக்கிற்கு அதிக நியமனம் செல்வதாக தெரிவித்து அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு தற்போது ஒரு கிராம சேவகர் பிரிவில் 10 பேருக்கு மட்டுமே என்ற அடிப்படையில் குறித்த எண்ணிக்கை பாதியாக குறைகின்றது. இதனால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 6,626 பேரில் 4,350 பேருக்கும் , கிளிநொச்சியில் 2,261 பேருக்கு வழங்கப்பட்ட அனுமதி 950 பேராகவும், மன்னாரில் 1,830 பேருக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,530 பேருக்குமே சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முன்னர் 1,565 பேருக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,360 பேர் நியமிக்கப்படவிருப்பதோடு வவுனியாவில் 1,258 பேரும் என முன்னர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 1020 பேருக்கே அனுமதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வடக்கு மாகாணத்திற்கு முன்னர் 13,540 பேர் நியிமிக்க அனுமதிக்கப்பட்ட போதும் இந்த தொகைநில் 4,230 பேரை நீக்கி 9,210 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படவுள்ளது.

வடக்கு கிழக்கிற்கு இடை நிறுத்தினாலும் இந்த நியமனம் கிடைக்கும் என அமைச்சர்களும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தபோதும் இவ்வாறு பல ஆயிரம் பேரை நீக்கியமை தொடர்பில் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.