பதுக்கி வைத்திருக்கும் அரிசியை சந்தைக்கு விநியோகிக்காவிட்டால் அதற்குரிய மாற்று நடவடிக்கையாக ஒரு இலட்சம் டொன் எடைகொண்ட அரிசி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இன்றைய தினம் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் நிலவுகின்ற அரிசி தட்டுபாடு மற்றும் அரிசி விலை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.