பாடசாலைகளின் இஸ்லாமிய பாடப்புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகள் அனைத்தையும் அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய அவர், முஸ்லிம் விவகார திணைக்களம் கடந்த காலத்தில் தீவிர அரசியல்மயமாக்கலில் சிக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.