சட்டவிரோத போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் உடதும்பர - நிசாருவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய குறித்த சந்தேக நபரிடம் இருந்து 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 39 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 8 கையடக்க தொலைப்பேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்வபம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.