பொதுமக்கள் சந்திப்பு நாளான புதன்கிழமைகளில் சகல அமைச்சர்களும் தமது அமைச்சுக்களில் கட்டாயம் இருக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூடடத்தில் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை நீக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆம் திருத்தச் சட்டம் நேற்று வர்த்தமானியில் வெளியாகியிருந்தது.
இந்த திருத்தச் சட்டம் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகிய விடயங்கள் தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.