நாடளாவிய ரீதியில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பாடசாலை மாணவர்களும், இடமாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆசிரியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில், இது ஒரு கடுமையான நெருக்கடி நிலையாகும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன், 19 ஆசிரியர் கல்லூரிகளில் இருந்து 5 ஆயிரம் ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர். எனினும், அவர்களுக்கு நியமனம் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உடனடியாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.