ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை (24) முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் 3 துணை ஆயர்கள் ஆகியோருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.
இதன்படி நாளை முற்பகல் 10.00 மணிக்கு அவர்கள் அனைவரையும் முன்னிலையாகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.