கண்டி பூவெலிகட பிரதேசத்தில் மூன்று பேரின் உயிரைப்பறித்த 5 மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடங்வல நாத ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமேவான அனுர லெவிகே என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
இன்று காலை கண்டி பொலிஸாரால் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் காலை 9.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.