மத்திய, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுப்படுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் குறித்த நடைமுறையை பின்பற்றுமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில தினங்களுக்கும் இந்த நிலை தொடரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.