மேல் மாகாணத்தில் இன்று முதல் புதன்கிழமை வரை வீதி ஒழுங்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணிவரை இந்த வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
'வீதி ஒழுங்கை ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
நான்கு பிரதான வீதிகளில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
$ads={1}
இதன்படி பொல்துவ சந்தியில் இருந்து ஹோட்டன் சுற்றுவட்டம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாவத்த, களனி பாலம் முதல் ஹைலெவல் வீதி சந்தி பேஸ்லைன் வீதி, அனுலா கல்லூரியில் இருந்து சம்போத ஜெயந்தி மாவத்தை, தும்முல்ல சுற்றுவட்டம், தேஸ்டன் வீதி, மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தை, நூலக சந்தி, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, ப்ளவர் வீதி சந்தி மற்றும் பித்தள சந்தி ஹைலெவல் வீதி மற்றும் வில்லியம் சந்தி முதல் காலி முகத்திடல் சுற்றுவட்டம், கோல் சென்டர் வீதி, என்எஸ்ஏ சுற்றுவட்டம் காலிவீதி ஆகிய இடங்களில் வீதி ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.