இலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையில் செயற்படும் பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
$ads={2}
பாதாள உலக குழு உறுப்பினர்கள் பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக இந்த முறையை பயன்படுத்திக் கொள்வதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
$ads={1}
அதற்கமைய கடலில் பதுங்கியுள்ளவர்கள் கரைக்கு வந்த பின்னர் கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸார் ஆயத்தமாகியுள்ளனர்.