கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்ட 108 நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
YICAI என்ற சீன ஆய்வு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பட்டியலுக்கு அமைய உலகளாவிய ரீதியில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு கிடைத்த உயர்ந்த இடம் இதுவாகும். இந்த பட்டியலில் முதலிடத்தை சீனா பிடித்துள்ளது.
இதன் முழுமையான அறிக்கை ஒக்டோபர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிக்கைக்கமைய உலகின் முதல் 10 நாடுகளில் 9 நாடுகள் ஆசிய - பசுபிக் நாடுகளாகும். சீனா, இலங்கை, தென் கொரியா, மியன்மார், அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளாகும்.
பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாக பெயரிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் பிரேசில் 89 ஆம் இடத்திலும் அமெரிக்கா 98வது இடத்திலும் உள்ளது.