இலங்கையில் நேற்றைய நாள் (08) முடிவில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குவைத்திலிருந்து வந்த இருவருக்கும், கட்டாரில் இருந்த வந்த 06 பேர் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 09 கைதிகளுக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனானவர்களின் எண்ணிக்கை 3,140 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலையில் 193 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.