தென்னிந்தியா மற்றும் மாலைதீவுக்கான விமான சேவையை இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீள ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாட்டில் சர்வதேச விமானப் பயணங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதேவேளை இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் தரிப்பதற்கும் பயணத்தின் போது இடைத்தங்கலுக்கும் கட்டணம் வசூலிப்பதை 12 மாத காலத்துக்கு இடைநிறுத்தும் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.