எங்கள் மக்கள் கட்சியின் (OPPP) பொதுச் செயலாளரான வடிநகல விமலதிஸ்ஸ தேரரை பல அமைச்சர்கள் திட்டமிட்டு மறைத்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எமது கட்சி தேசிய பட்டியல் ஆசனம் வழியாக நாடாளுன்றத்திற்கு சட்டப்பூர்வமாக நுழைவதைத் தடுக்க ஒரு பரவலான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஒரு தேசிய பட்டியல் இடத்தை வென்றதன் பின்னர் OPPP நெருக்கடியில் விழுந்தது.
கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் தேசிய பட்டியல் வழியாக ஞானசார தேரரை நியமிக்க ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டியிருந்தனர். இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளர் தேசிய தேர்தல் ஆணையத்தில் வேட்பு மனுவை சமர்ப்பிக்கும் தினத்திற்கு முன்னைய தினம் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.