இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று (15) மோட்டார் போக்குவரத்துத் சபையின் சாரதி உரிமத்தின் அச்சிடுதல் மற்றும் வழங்கல் செயல்முறையை கையகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
சிக்னல் அதிகாரி, தகவல் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் பல தொழில்முறை தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் மாநாடு தலைமை தாங்கியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பரிந்துரையின் பேரில், 2020 ஜூலை 01 அன்று இடம்பெற்ற அமைச்சரவை அமர்வின் போது, சாரதி உரிமம் அச்சிடும் பணியை தற்போது ஒரு தனியார் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், பல பொருத்தமான அம்சங்களை கருத்தில் கொண்டு, அதை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க முடிவு செய்தது,.
நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, குழு முன்வைத்த சாத்தியக்கூறுகள் மற்றும் முன்மொழியப்பட்ட செயல் திட்டத்தை மறுஆய்வு செய்து, இத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளை தொடருமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.
திட்டத்தின் மொத்த பரிமாற்ற செயல்முறை 2021 ஜனவரி 01 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாட்டின் எதிர்கால தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய ‘தேசிய தகவல் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான இராணுவ மையம்’ என இந்த திட்டத்தை நிறுவ இராணுவ தளபதி ஒப்புதல் அளித்தார்.