கண்டி ஹந்தான – தபோதாரகம வீதியில் பெக்கோ இயந்திரம் ஒன்று கவிழ்ந்தில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
நேற்று முன்தினம் பிற்பகல் குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெக்கோ இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பின்நோக்கி சென்று கவிழ்ந்துள்ளது.
விபத்தில் பெக்போவில் பயணித்த மூவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 37 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.