மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பிரதேசங்களிலும் நாளை (20) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75mm அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லி மீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் பலத்த அல்லது மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.