சட்ட விரோதமான முறையில், தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்ற இலங்கையர் ஒருவரை ராமேஸ்வரம் மெரைன் போலிசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து ராமேஸ்வரம் மெரைன் போலிசாருக்கு தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
$ads={1}
இதன் போது குறித்த நபர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என தெரிய வந்துள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.