ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, பாடசாலைகளில் மாணவர்களை சேர்பதற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராகபக்ஷ அறிவித்துள்ளார்.
அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதமர், அலரிமாளிகை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளினது பெயர்கள் குறிப்பிடப்பட்டு, பாடசாலை அதிபர்களுக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்படுவது குறித்து அவதானிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், பாடசாலை அதிபர்கள் இவ்வாறான கடிதங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஜனாதிபதியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக உள்ள சட்டதிட்டங்களை மாத்திரம் உள்வாங்கி அதிபர்கள் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நியமங்களை மீறி செயற்படும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.