கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 18 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,253 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 06 பேருக்கும் இந்தியாவிலிருந்து வருகை தந்த 05 பேருக்கும், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த 04 பேருக்கும், கட்டார், வியட்நாம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒவ்வொருவருக்கம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று மாலை சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.