வத்தேகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகளுக்கு அருகில் நடமாடிய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கண்டி - மடவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, சுமார் 200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
அப்பகுதியில் ஹெராயின் போதைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் அதற்கு பதிலாக குறித்த போதைப்பொருள் மாத்திரைகளை வினியோகம் செய்வதற்காக வந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
-மெட்ரோ நியூஸ்