கொரோனா தொற்று அச்சம் காரணமாக பரீட்சை நிலையங்களில் முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரீட்சை நிலையங்களை அண்மித்த வைத்தியசாலைகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி சிகிச்சைகளை வழங்குவதற்காக அம்பியூலன் வண்டிகளை தயார்படுத்தல் மற்றும் விடுதி வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள 2,648 நிலையங்களில் குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது.
அத்துடன், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி, நாடு முழுவதும் உள்ள 2,936 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
இந் நிலையிலேயே, முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.