மடத்தனமான அரசியலிருந்து சமூகம் விடுதலை அடைய வேண்டும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
சிங்கள பௌத்த மக்களுக்குள் இருக்கின்ற மத ஆயுதத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி புதிதாக வந்துள்ள அரசாங்கம், தாம் எதிர்கொள்கின்ற பூகோள அரசியல் பிரச்சினைகளைக் கையாளும் தந்திரமாகப் பயன்படுத்துவதாக பசீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.
13 ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்வதினால் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற கோபத்தை மாடறுப்பு எனும் விடயத்தினால் சமப்படுத்தலாம் என அரசாங்கம் எண்ணுவது தான் பூகோள அரசியல் என அவர் சுட்டிக்காட்டினார்.
காத்தான்குடியில் நேற்று (11) இடம்பெற்ற நூல் அறிமுக விழா ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
-Newsfirst