முடிவுக்கு வந்த சி.வி விக்னேஸ்வரனின் வழக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முடிவுக்கு வந்த சி.வி விக்னேஸ்வரனின் வழக்கு!


இரு சாராரின் இணக்கப்பட்டுடன் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடிவுக்கு கொண்டுவர மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரான முன்னாள் வடமாகாண அமைச்சர் ப. டெனிஸ்வரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை பிரதிவாதிகளான சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் திரும்ப பெறுவதற்கு இணங்கியுள்ளதால் மனுதாரர் வழக்கை தொடர்ந்தும் நடந்த விரும்பவில்லை என கூறினார்.


இதன்போது சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணகேஸ்வரன், தமது கட்சிக்காரர்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.


இந்த இணக்கப்பாட்டுடன், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.


2018 ஆம் ஆண்டு அப்போதைய வட மாகாண சபையின் மீன் வளதுறை அமைச்சராக கடமையாற்றிய தம்மை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு ப. டெனிஸ்வரன் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடதக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.