இந்நாட்டில் ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியலைச் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது இச்சந்தர்ப்பத்தில் கொடுமை எனவும் தெரிவித்தார்.
மக்களின் மனம் சிதைவடைந்ததன் காரணமாக மக்கள் இந்த அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், இன்று ஒரு கிராமத்திற்கு ஜனாதிபதி சென்றால் கடவுள் வருகிறார் எனக்கூறும் நாடு இது என ஹிருணிகா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை பெய்த காரணம், ஜனாதிபதி நாடு முழுவதும் சென்றமையால் கூட இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
மக்கள் இத்தகைய மனநிலையில் இருக்கும் போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இப்போது எஞ்சியிருப்பது கொடுப்பதை எடுத்துக்கொண்டு அடுத்து எதற்காவும் காத்திருப்பதுதான் என அவர் தெரிவித்தார்.
19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம் பெற்றதாக இருக்கும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நாட்டில் ராஜபக்ஷக்கள் மாத்திரமாக அரசியலைச் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர் ஒரு சாதாரண அரசியல் வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது கொடுமை என அவர் தெரிவித்தார்.