காலியில் உள்ள பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 45 கைதிகள் இன்று (14) தங்கள் போராட்டத்தை முழுமையாக கைவிட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கப்பட்ட போராட்டத்தை இன்று கைதிகள் முடித்தனர்.
சிறைச்சாலையில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்துவது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கிட்டத்தட்ட 40 கைதிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
தங்களது கோரிக்கைகளை அதிகாரிகள் பரிசீலிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த 20 கைதிகள் நேற்றே உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இதற்கிடையில், மீதமுள்ள 20 கைதிகள் உணவு உட்கொள்ள மறுத்து வேலைநிறுத்தத்தை இன்று தொடர்ந்தனர். அவர்களும் பின்னர் போராட்டத்தை கைவிட்டனர்.
சில தினங்களின் முன்னர் பாதுகாப்பு செயலாளர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோது, சில தினங்கள் சாப்பிடாமல் இருப்பார்கள், பசிக்க தொடங்கியதும் சாப்பிடுவார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.