பிரேமலால் ஜயசேகர எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இரத்திபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட சொக்கா மல்லி என்றழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது.
இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.