கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி
புகையிரத நாளை முதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கடுகதி புகையிரத சேவை நாளை முதல் வார நாட்களிலும் வழமை போல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.