ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார்.
அம்பலாங்கொடையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாத நடவடிக்கைகளில்ஈடுபடுபவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
19 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தக்கூடிய 19 Plus மூலம் ஸ்திரமான தேசிய பாதுகாப்பினை உருவாக்குவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அவ்வேளை தெளிவான தலைமைத்துவம் இருக்கவில்லை என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் அதன் பின்னர் எடுக்க்பபட்ட நடவடிக்கைகளும் பின்னடைவை சந்தித்தன என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பிரஜைகளும் கடந்த காலத்திலிருந்து பாடங்களை கற்று வலுவான தேசிய பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.