கிழக்கு மாகாணத்தில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M. L. A. M ஹிஸ்புல்லாஹ் ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு இருந்த அரசியல் பலம் காரணமாக அவரது இந்த செயற்பாடுகள் சம்பந்தமாக முறைப்பாடு செய்ய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சாதாரண மக்கள் அஞ்சினர்.
கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வந்த அடிப்படைவாத அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா, அமீர் அலி, ரிஷாட் பதியூதீன் போன்ற பிரபல அரசியல் தலைவர்கள் அதனை எதிர்த்தனர்.
ஆரம்பத்தில் இந்த அடிப்படைவாத முஸ்லிம் குழுக்கள் ஆயுதங்களுடன் அடிப்படைவாதத்தை பிரசாரம் செய்ய நடவடிக்கை எடுத்தன. பின்னர் கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிராக சாதாரண மக்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடு செய்ய அஞ்சினர் எனவும் எடிசன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.