வீடொன்றில் வளர்க்கப்பட்டுள்ள நாய்க்குட்டி பிறிதொரு வீட்டுக்குள் சென்ற விளைவால் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று கண்டி - தெல்தொடவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட நாய்க்குட்டி கடந்த 10ஆம் திகதி பிறிதொரு நபரின் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
பின்னர் நாய்க்குட்டி தொடர்பில் தகவலறிந்த நாய்க்குட்டியின் உரிமையாளர் குறித்த நபரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
இருவருக்கிடையிலான மோதலில் நாய்க்குட்டியின் உரிமையாளர் மேற்கொண்ட தாக்குதலில் மற்றைய நபர் பலத்த காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாய்க்குட்டியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.