கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் பங்கேற்பவர்கள் சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் தலைமை தொற்றுநோய் தடுப்பு வைத்தியர் சுதத் சமரவீர இதனைக் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியானது இன்று (18) முதல் இம்மாதம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால் 22 ஆவது முறையாகவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தகக் கண்காட்சியானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பங்கேற்பவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவத அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.