வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ என்பவர் கடந்த மூன்று வருடமாக காணாமல் போன நிலையில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவரது தாயார் வெள்ளத்தம்பி கசீனாஉம்மா (55) தெரிவித்தார்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (23) என்பவர் கடந்த 2017.12.29ம் திகதி வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது தாயார் தெரிவித்தார்.
$ads={1}
அதன் பின்னர் கடந்த 2017.12.29ம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழும்பி பார்க்கும் போது உறங்கிய மகளை காணவில்லை என்றும், மகள் வீட்டில் இருந்து அவரது உடைகள் மற்றும் ஆபரங்களை எடுக்காமல் உடம்பில் போடப்பட்ட ஆபரணங்களுடனும், கையடக்க தொலைபேசியுடனும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 2017.12.30ம் திகதி முறைப்பாடு செய்ததுடன், இவரது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கியபோதும் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் அந்த தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.
$ads={2}