அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த மாணவிகள் மதவாச்சியில் உள்ள விகாரை ஒன்றில் நடத்தப்படும் தனியார் வகுப்பில் கலந்துக்கொள்ளவதற்காக வந்த போது, தண்ணீர் போத்தல்களில் பியர் மது பானத்தை எடுத்து வந்து அருந்திக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரில் வந்த நபர் ஒருவர் இந்த மாணவிகளுக்கு மதுபானத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளதாகவும் அந்த நபரை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவிகள் நீண்ட காலமாக மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.