நாடு ஆபத்தான சூழ்நிலையை நோக்கிச் செல்கிறது என முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசியக் கட்சி 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றது. இது தொடர்பாக ஏற்கெனவே நட்பு கட்சிகளின் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பலத்தைப் பலவீனப்படுத்திக் குறைப்பதாகும்.
இதனால், இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமல்ல சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
20ஆவது திருத்தச் சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானியுங்கள்.
அதனால், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பலத்தைப் பலவீனப்படுத்துவது மிகப் பெரிய அனர்த்தம்.
ஐக்கிய தேசிய கட்சியாக 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.