தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட 30 மாத சிறைத் தண்டனையின் போது தன்னை ஏன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க விடவில்லை என்று பீல்ட் மார்ஷல், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்றையதினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள கூட தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மரண தண்டைனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்விலேயே சரத் பொன்சேகா இந்த கேள்வியை எழுப்பினார்.
இதுவேளை, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சபாநாயகருக்கு மட்டுமே இது தொடர்பில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று இதன்போது தெரிவித்தார்.