புத்தர் சிலை உருவம் பதிக்கப்பட்ட சாரியை அணிந்துவந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் உடையை அவதானித்த வைத்தியசாலை அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
வைத்தியர் ஒருவருடைய மன்னார் பகுதியிலுள்ள இல்லத்தில் உதவி பணிசெய்யும் குறித்த பெண், அந்த மருத்துவர் சுகயீனமடைந்து குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பார்க்க வந்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு வைத்தியரின் மகளுடன் பொலிஸார் தொடர்புகொண்டு பிறிதொரு சாரியை வழங்கும்படி பணித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.