'எனது தந்தை உயிருடன் இல்லை. ஒரு நாள் தந்தை கனவில் தோன்றினார். அப்போது அவர் புதையல் ஒன்று என்னிடம் கூறினார். அது எனக்குரியது அதனை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார்' என சந்தேக நபர் கூறியுள்ளார்.
இந்த சந்தேக நபர் கோனகங்ஹார வகுருவெல பிரதேசத்தில் நிலத்தை தோண்டி புதையல் எடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருங்கல்லில் செய்யப்பட்ட கலசத்தில் இந்த யானை முத்துக்கள் இருந்துள்ளன. அதனை உடைத்து சந்தேக நபர் அவற்றை எடுத்துள்ளார். மாணிக்க கங்கையில் வீசப்பட்ட கல் கலசம், யானை முத்துக்கள் வைக்கப்பட்டிருந்த பேழை கால்வாய் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புதையலில் கிடைத்த யானை முத்துகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோனகங்ஹார பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தனிப்பட்ட ஒற்றர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவறை குழியை வெட்டுவதாக கூறி சந்தேக நபர் புதையலை தோண்டி எடுத்துள்ளார்.
வகுருவெல புத்தல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இந்த சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.