பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று (15) மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் 190 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர்.
அத்துடன் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமையும் பெய்ரூட்டில் களஞ்சியசாலையொன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்றும் பதிவானது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது பெய்ரூட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தானது அங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெய்ரூட் துறைமுகத்தை கடந்து செல்லும் பிரதான சாலையில் நிர்மானிக்கப்பட்டு வரும் ஓவல் வடிவக் கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
Good morning - in today's news from #Lebanon, a huge fire erupted in the Beirut souks, in one of Zaha Hadid's signature design buildings. pic.twitter.com/Ahs1pIc0bf
— Luna Safwan - لونا صفوان (@LunaSafwan) September 15, 2020