அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில் சர்ச்சைக்குள்ளாகிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் பிரதித்தலைவர் அஷ்ஷெய்க் எம். முர்ஷித் அவர்களுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட போலியான தகவலுடன் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலாவருவதாக முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி கவலை தெரிவித்துள்ளார்.
தனது படத்தை இணைத்து தரக்குறைவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த படம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்து அவரிடம் சகோதர ஊடகம் ஒன்று வினவிய போது விளக்கமளித்திருந்தார்.
இது குறித்த மறுப்பைத் தனது உத்தியோகபூர்வ முகநூப் பக்கத்திலும் வெளியிட்டிருப்பதாகவும் வேண்டுமென்றே விசமத்தனமான செயல்களில் சமூகத்தார் ஈடுபடுவது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.