சவூதியில் வாலும் முஸ்லிம்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 04ஆம் திகதியிலிருந்து புனித மக்கா நகருக்கு உம்ரா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
கொரொனா நோய்த்தொற்றுக் காரணமாக, மார்ச் மாதம் நிறுத்திவைக்கப்பட்ட உம்ரா பயணங்கள் படிப்படியாக மீண்டும் அனுமதிக்கப்படும்.
ஹஜ்ஜு யாத்திரையைப் போலின்றி ஆண்டின் எந்த நாளிலும் உம்ரா பயணத்தை மேற்கொள்ளலாம்.
உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் விருப்பத்தை நிறைவேற்ற அதனை மீண்டும் அனுமதிக்க முடிவெடுத்ததாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சு கூறியது.
முதற்கட்டமாக, ஒவ்வொரு நாளும் 6,000 உள்ளூர்வாசிகள் அனுமதிக்கப்படுவர்.
நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து வெளிநாட்டு யாத்ரீகர்களும் அனுமதிக்கப்படுவர்.
அப்போது, தினசரி 20,000 பேர் வரை உம்ரா மேற்கொள்ளலாம்.
கொரொனா பரவல் முறியடிக்கப்பட்ட பிறகு, கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என்று அமைச்சு கூறியது.