ஊழல் குறித்து ஆராய நல்லாட்சி அரசின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழு செயலகம் 29 மாதங்களாக பெரிய அளவிலான ஊழல்களைச் செய்து 33,714,807.59 மில்லியன் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
$ads={1}
இவை தொலைபேசி, மின்சாரம், நீர் கட்டணங்கள், மேலதிக மற்றும் விடுமுறைகளுக்கான கொடுப்பனவுகள், வாகன திருத்தப்பணிகள் மற்றும் ஏனைய விடயங்களுக்காக இந்த பணம் செலவிடப்பட்டதாகவும் சான்றுகள் காட்டுகின்றன.
அதன்படி, இவ்வாறு இடம்பெற்ற பாரிய ஊழலை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துமாறு ஆணைக்குழு பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஊழல் தடுப்பு அலுவலகம் எந்தவொரு சட்டபூர்வமான அந்தஸ்தும் இல்லாத நிறுவனம் என்றும், அத்தகைய அலுவலகம் செயற்படுகிறதா என்று தெரியவில்லை என்றும் சமீபத்தில் ஆணைக்குழு முன் சாட்சியமளித்த ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் சாட்சியங்களையம் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
$ads={2}
பொய்களை வௌிக்கொணர்வது முக்கியம் என்பதனால், அந்த அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்குமாறும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தை ஸ்தாபிக்கும் போது தானாக முன்வந்து இராஜினாமா செய்த ஊழியர்களுக்கு இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை வழங்குவதில் தான் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.