1971 ஆம் ஆண்டு முதல் மாணிக்கம் மற்றும் நகைத் தொழிலுக்கு வழங்கப்பட்ட வருமான வரி சலுகை 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரிக் கொள்கையிலிருந்து நீக்கப்பட்டது.
"2018 ஆம் ஆண்டில், தங்க இறக்குமதிக்கு 15% வரி விதிக்கப்பட்டது. இந்த வரிகள் நகைகளின் விலை உயர காரணமாக அமைந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், மாணிக்கத்துறை மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்