ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் புதிய வாகன இலக்க தட்டுகளை (நம்பர் பிளேட்) தபால் மூலம் வீடுகளுக்கு வழங்குவதற்கான புதிய திட்டம் அமுல்படுத்தப்டவுள்ளதாக வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில்வே வண்டிகள் மற்றும் மோட்டார் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இனி பழைய வாகனத் தட்டுகளை மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இலக்க தட்டுகளை எரித்து அழிக்கும் பொறுப்பு வாகன உரிமையாளர்களிடமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் வண்டிகள் மற்றும்மோட்டார் கைத்தொழில் துறை அமைச்சர் திலும் அமுனுகம இக்கருத்துக்களை தெரிவித்தார்.
$ads={1}
வரவிருக்கும் வாகன இலக்க தட்டுகளில் வாகன உரிமையாளர் தகவலுடன் ஒரு இலத்திரனியல் சிப்பை நிறுவவுள்ளோம். சிப்புடன் இனை ஸ்கேன் செய்வதன் மூலம் வாகனத்தின் உரிமையாளரின் தகவல்களை எளிதாக அடையாளம் காண முடியும் என்று அமைச்சர் கூறினார்.