நாட்டில் காணப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (10) மாலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தள்ளார்.
மேலும், கல்வி முறையை மேம்படுத்தும் வகையில் மாவட்ட கல்வி குழுக்களை நியமிக்க ஜனாதிபதியும் பிற இராஜாங்க அமைச்சர்களும் கலந்துரையாடி முடிவு செய்துள்ளனர்.
வலயக் கல்வி பணிமனைகளுக்கும் பிரதேச அலுவலகங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முடிவுகள் எட்டப்பட்டது.
மேலும், ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வது என்பவற்றைத் தவிர்த்து, ஏனைய பாடசாலை அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் விடயங்களில் அரசியல்வாதிகள் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை மீள்நிரப்புவதற்கு பதில் அதிபர்களை நியமிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாடசாலைகளில் திறமையான மற்றும் அனுபவம் மிக்க ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.