சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அரசியல் வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தலைமை எதிர்க்கட்சி எம்.பி லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த அந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் ஆளும் கட்சி அரசுடன் சேரும் பழக்கம் கொண்டவர்கள் என சுட்டிக்காட்டினார்.
1989ஆம் ஆண்டு முதல் தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் கடைசியில் அவர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றார்.
மேலும், தேர்தலுக்காக பணம் செலவழிக்கும் முஸ்லிம் வர்த்தகர்கள் அந்த முஸ்லிம் எம்.பி.க்களை தற்போதைய அரசாங்கத்தில் சேர கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
எனவே, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் தற்போதைய அரசாங்கத்துடன் இணைய முடிவு செய்திருந்தால், அவர்களை அவ்வாறு செய்ய வேண்டாம் என தன்னால் பரிந்துரைக்க மாத்திரமே முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.