சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில் உள்ளது.
தமிழர்களின் உரிமை மறுப்பு மற்றும் நினைவேந்தல்களுக்கான தடை ஆகியவற்றை கண்டித்து தமிழ் கட்சிகளினால் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.