குரங்குகளை கட்டுப்படுத்த 1992 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு அரசு அறிவித்துள்ளது.
குரங்குகளினால் அழிவடையும் விவசாய நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரசாங்கம் புதியதொரு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனடிப்படையில் 1992 என்ற இலக்கத்தின் ஊடாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குரங்குகளின் தொல்லை சம்பந்தமான தகவல்களை வழங்கி, அதனூடாக விவசாயிகள் நிவாரணம் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.