இலங்கையில் சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதற்கான யோசனை நீதியமைச்சர் அலி சப்ரியினால் இன்று (16) கூடவுள்ள அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது இருக்கின்ற சட்டத்தின்படி 16 வயது வரை உள்ளவர்கள் சிறுவர்களாகவே கணிக்கப்படுகின்றனர். இளைஞர் வட்டத்திற்குள் நுழைவதற்கு 16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
புதிய யோசனைப்படி 16 வயது என்கிற வரையறை 18 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.